போக்குவரத்து அபராதத் தொகையை 50 மடங்காக உயர்த்துகிறது இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த, சாலை போக்குவரத்து அபராதத் தொகையை மிகவும் அதிக அளவில் அதிகரிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாலைப் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கொழும்பு நகரம் (கோப்புப் படம்)

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களை முந்தி செல்ல தவறான பக்கத்தை தேர்ந்தெடுப்பது மற்றும் அதிக வேகத்தில் செல்வது போன்ற சாலைப் போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்கு அபராதத் தொகையை 160 டாலர்களுக்கும் மேலாக அதிகரிக்க இலங்கை அரசு திட்டமுள்ளது.

இது தற்போதைய அபராதத் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.

சில தனியார் பேருந்து நிறுவனங்கள் இந்த புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில். இந்த திட்டத்துக்கு பொது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்