இலங்கையில் சுமார் 200 கிலோ கிராம் கொக்கேயின் போதைப்பொருள் பிடிபட்டது

இலங்கைக்குள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய கொக்கேயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பிரேஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை கொள்கலனிலிருந்த எட்டு மூடைகளிலிருந்து இந்த கொக்கேயின் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளர் தர்சேன கஹந்தவ பிபிசி சிங்கள சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சர்க்கரை கொள்கலன்கள் வழமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படுவது வழக்கம் என தெரிவித்த அவர், அப்படியான பரிசோதனை இன்றை தினம் மேற்கொள்ளப்பட்டபோது இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.

இந்த போதைப்பொருள் பல மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவித்த சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் தர்சேன கஹந்தவ, சம்பவம் தொடர்பில் கொள்கலனை இறக்குமதி செய்த செய்த வர்த்தகரும் அதனை பெற்றுக்கொள்ள வந்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்