போர்க்குற்ற விசாரணையைக் கைவிட டிரம்ப்பின் உதவியைக் கோருகிறார் சிறிசேன

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை போர் குற்றம் இழைத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, ஐக்கிய நாடுகளின் அவையை கைவிட செய்வதற்கு, சிறப்பு செய்தியை டிரம்புக்கு அனுப்பியிருப்பதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிறிசேன அதிபராக பதவியேற்றபோது, போர் குற்றம் பற்றி விசாரிக்க உள்நாட்டு ஆணயத்தை உருவாக்க வாக்குறுதி அளித்திருந்தார்

நீண்டகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரின் கடைசி காலக்கட்டங்களில் அரசு படைப்பிரிவுகள் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் பற்றி புலனாய்வு மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை கவுன்சில் அழைப்புவிடுத்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சிறிசேன அதிபராக பதவியேற்றபோது, போர் குற்றம் பற்றி விசாரிக்க உள்நாட்டு ஆணயத்தை உருவாக்கி, குற்றம் இழைத்தோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், இது தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.