தென்னகத்தில் இருந்து இலங்கை வரும் பறவைகள் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்னகத்தில் இருந்து இலங்கை வரும் பறவைகள் - காணொளி

இது இலங்கையின் தெற்கு மாவட்டமான அம்பலாந்தொட்டை தெஹிகஹலந்த பிரேதேசத்தின் மாலைக்காட்சி.

கூட்டமாக வானில் வட்டமிடும் இந்த பறவைகளை, சில மாதங்கள மட்டுமே இப்பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.

நவம்பர், டிசம்பர் மாதமளவில் தென் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்துவரும் இந்த பறவைகள், பெப்ரவரி வரை இலங்கையில் உலாவித்திரிந்து வானை அலங்கரிப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த கண்கவர் காட்சியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு வருவது வழக்கம் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

அம்பலாந்தொட்டை மட்டுமல்லாது புந்தல தேசிய பூங்கா லுனுகம்வெஹெர கட்டுநாயக்க மற்றும் அதனையண்டிய பகுதிகளிலும் இவற்றை காணக்கூடியதாக இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.