காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரம் வாய்ந்த ஒருவர் வந்து பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி, வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதம்
படக்குறிப்பு,

உண்ணாவிரதப் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இந்தச் சங்கத்தினர் ஆரம்பித்திருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்த உறுதிமொழியொன்றையடுத்து நான்காவது நாள் கைவிடப்பட்டிருந்தது.

ராஜாங்க அமைச்சரின் உறுதிமொழிக்கமைய பிரதமர், காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட உயர் மட்டத்தினர் கலந்து கொள்கின்ற ஒரு சந்திப்பில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழிக்கமைய கொழும்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.

பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுமில்லை.

இதனையடுத்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவு தெரிவிக்கப்பட வேண்டும்

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்