வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை: மைத்ரிபால சிறிசேன உறுதி

இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை தான் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.

முன்னாள் ஐ.நா பொதுச் செயலருடன் மைத்ரிபால சிறிசேன
படக்குறிப்பு,

முன்னாள் ஐ.நா பொதுச் செயலருடன் மைத்ரிபால சிறிசேன

பொலநறுவையில் புதிய நீதிமன்ற கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்திருக்கின்றார்.

படக்குறிப்பு,

முன்னாள் ஐ.நா பொதுச் செயலருடன் மைத்ரிபால சிறிசேன

.''சர்தேச ரீதியில் வெளிநாட்டு நீதிபதிகளை இங்கு வரவழைக்க வேண்டும் என்ற பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.'' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.

இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ''சர்வதேச நீதித் துறை சார்ந்தவர்கள் , ஐ.நா செயலாளர் நாயகம் , மனித உரிமைகள் ஆணையர் மற்றும் பிரதான நாட்டு தலைவர்கள் உட்பட சகலருக்கும் இது பற்றி நான் கூறியிருக்கின்றேன்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க கூடிய நிலை நாட்டில் இல்லை. ஒரு புறம் இதற்கு சட்டத்தில் இடமில்லை. அப்படியானால் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். மறுபுறம் அரசு என்ற ரீதியில் உள்நாட்டு நீதித்துறை மற்றும் நீதிபதிகள் தொடர்பாக நம்பிக்கை இருக்கின்றது. '' என்றார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தான் ஒரு போதும் ஆயத்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.