இலங்கை: சிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில் 7 பேர் பலி
இலங்கையில் சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவல நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் சென்ற சிறைச்சாலை வாகனம் மீது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது
இன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்த பகுதியை ஆய்வு செய்யும் போலீசார்
வாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்