இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரியசாத் டெப் பரிந்துரை

இலங்கையின் 45 -வது தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் நியமிக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்ற அரசியலமைப்பு சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

தலைமை நீதிபதி ஸ்ரீபவன்
படக்குறிப்பு,

2015 ஆம் ஆண்டு மொஹான் பிரிஸ் பதவி நீக்கப்பட்ட பின்னர், தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டார் (கோப்புப்படம்)

தற்போதைய தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் இன்று செவ்வாய்கிழமை தனது பதவியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

இதனால் காலியாகும் தலைமை நீதிபதி பதவிக்காக, தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணிபுரிந்து வரும் நீதிபதி பிரியசாத் டெப் நியமிக்கப்பட வேண்டுமென்று நேற்று இரவு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு சபை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த சில தினங்களில் அப்போது தலைமை நீதிபதியாக கடமையாற்றிய மொஹான் பிரிஸ் பதவி நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் தலைமை நீதிபதியாக தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டார்.

தற்போது பரிந்துரை செய்யப்படும் நீதிபதி பிரியசாத் டெப் பலமுறை பதில் தலைமை நீதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தகது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்