கேப்பாப்பிலவு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தது என்ன? இரா. சம்பந்தன் பேட்டி

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நேற்று மாலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையிலான குழு ஜனாதிபதியை சந்தித்துள்ள வேளையில், இந்த சந்திப்பின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.