இலங்கை: அரசு அதிகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது

  • 1 மார்ச் 2017

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அதிகாரியொருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம்  தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Image caption துப்பாக்கிச்சூடு சம்பவம்  தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு  காணி சீர்திருத்த ஆணையகத்தின் மட்டக்களப்பு மாவட்ட துணை இயக்குநரான நேசகுமார் விமலராஜ் களுதாவளையிலுள்ள அவரது  வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக ஐந்து போலீஸ் குழுக்களால் சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கைதான இந்நபர்  மாவட்ட செயலக தனியார்  பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர் என கூறப்படுகிறது.

Image caption தூப்பாக்கிச்சூட்டிற்கு நீதிக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டாத்தின் போது

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையின்போது தான் சம்பவ தினம் கொழும்பில் தங்கியிருந்ததாக அவரால் தெரிவிக்கப்பட்டாலும் இரு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் போலிஸாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்ந்து போலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்திய இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த காணி அதிகாரியான விமலராஜ் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு நீதி கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்