கண்டிப் பிரதேசத்தில் அரசு தேயிலைத் தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு

  • 3 மார்ச் 2017

இலங்கையில் கண்டிப் பிரதேசத்தில் உன்னஸ்கிரிய எயார்பார்க் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மூன்று தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மலையகத்திலும் காணிக்கா மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாகவே இந்தப் போராட்டம் வெடித்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இந்தக் காணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டு, அவர்களால் பராமரிக்க முடியாத காரணத்தினால் மீண்டும் அந்தக் காணிகள் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டிந்தது.

அதே காணிகளை மீண்டும் தனியாருக்கு வழங்குவதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். சிறிலங்கா சுதந்திர தோட்டத் தொழிலாளர் சங்கம், செங்கொடிச் சங்கம் ஆகிய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மலையகத்தின் முன்னணி தொழிற்சங்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இந்தப் போரட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்