பாரிஸில் பேரணி நடத்தி தனக்கான ஆதரவை நிரூபிக்க ஃபியோங் முயற்சி

தன் மீது குற்றவியல் விசாரணை ஒன்று நடைபெற இருப்பினும், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு போதுமான ஆதரவு இன்னும் இருப்பதை காட்டும் முயற்சியாக பிரான்ஸ் கன்சர்வேட்டிவ் பிரான்சுவா ஃபியோங் பாரிஸில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆயிரக்கணக்கானோர் தன்னுடைய பேரணியில் கலந்து கொள்வர் என்று ஃபியோங் நம்புகிறார்

தான் இன்னும் தகுதியான அதிபர் வேட்பாளர்தான் என்று திங்கள்கிழமை நடைபெறும் கட்சி தலைவர்களை கூட்டத்தில் நம்ப வைக்க குறைந்தது 50 ஆயிரம் ஆதரவாளர்களை கொண்ட மக்கள் கூட்டம் அவருக்கு தேவைப்படுவதாக பாரிஸில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

நவம்பரில் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிபர் வேட்பாளரை முடிவு செய்வதற்கான பூர்வாங்க தேர்தல்களில் தனக்கு முக்கிய போட்டியாளராக இருந்த ஆலென் ஜூப்பேயை தோற்கடித்த .பியோங்கிற்கு மாற்றான வேட்பாளர் யாரும் இல்லை என்று தெரிவித்து, "காமன் ஸ்சென்ஸ்" என்கிற ரோமன் கத்தோலிக்க நிறுவனம் இந்த பேரணிக்கு ஆதரவு அளிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இறுதிவரை போராட ஃபியோங்கை அவரது மனைவி பெனிலோப் கேட்டுகொண்டுள்ளார்

செய்யாத வேலைகளுக்காக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஊதியம் வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஃபியோங் மறுத்துள்ளார்.

நாடாளுமன்ற உதவியாளராக பல்வேறுபட்ட பணிகளை செய்திருப்பதாகவும், சமீபத்தில் நிறைவேற்றியுள்ள வேலைகள் பற்றிய சான்றுகளை புலனாய்வாளர்களுக்கு அவருடைய வழக்கறிஞர்கள் வழங்கி இருப்பதாகவும் சனிக்கிழமை அவரது மனைவி பெனிலோப் ஃபியோங் முதல்முறையாக பொதுப்படையாக தெரிவித்த கருத்தில் குறிப்பிட்டுள்ளார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்