பாரிஸ் பேரணி ஃபியோங் அதிபர் வேட்பாளராக தொடர கைக்கொடுக்குமா?

  • 5 மார்ச் 2017

நடைபெறயிருக்கும் குற்றவியல் விசாரணையில் இருந்து அவர் வெற்றிகரமாக விடுவிக்கப்படுவார் என்று கொடிகளை அசைத்து ஆதரவு தெரிவித்த பல லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் பேசிய பிரான்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிபர் வேட்பாளர் பிரான்சுவா ஃபியோங் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

தன்னுடைய மனைவிக்கு வரி செலுத்திய மக்களின் பணத்தை குறைவான வேலைக்கு அல்லது செய்யாத வேலைக்கு ஊதியம் வழங்கியதாக பக்குவமின்றி குற்றஞ்சாட்டிவிட்டதாக, குற்றம் சாட்டியோரே வெட்கப்படும் அளவுக்கு இந்த விசாரணை அமையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக உணர்ச்சி மிகுந்த நடிப்புகளால் சோசலிச கட்சியின் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் நிர்வாகத்தை நடத்தி சென்றதில் இருந்து பிரான்ஸை காப்பாற்ற தான் பணிபுரிய போவதாக ஃபியோங் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால், திங்கள்கிழமை நடைபெறும் இந்த கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது, ஃபியோங்கிற்கு மாற்று வேட்பாளராக அவரது போட்டியாளர் அலென் ரூப்பே முன்னிறுத்தப்படுவார் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினராக கிறிஸ்டியன் எஸ்ராசி தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்