திருகோணமலையில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

  • 7 மார்ச் 2017

இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று கிண்ணியாவாசிருவர் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாகேணியைச் சேர்ந்த 43 வயது ஹாலித், டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்; இதன்மூலம் டெங்கு நோயின் தாகத்தினால் கிண்ணியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை டெங்குநோய் மேலும் பரவாதவாறு மக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்பகுதியையும் நுளம்புகள் பரவாத வகையில், நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை தாற்காலிகமாக மூடுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனன், மத்திய கல்வி அமைச்சர் அகிலராஜ் காரிவாசத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை அரசினர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்