இலங்கை மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்றக் காவல்

இந்தியக் கடலோரக் காவல்படையால் நேற்று கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பத்து பேரை 23ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை S. KODIKARA/AFP/Getty Images
Image caption படகில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் இலங்கை மீனவர்கள் (கோப்புப்படம்)

நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 50 மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகளை இந்தியக் கடலோரக் காவல்படையினர் நேற்று மடக்கிப்பிடித்தனர்.

காணொளி: இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழக மீனவர்கள்

மனோஜ் மற்றும் கலனபுதா - 03 என்ற இந்த இரண்டு படகுகளிலும் தலா ஐந்து மீனவர்கள் இருந்தனர். இந்திய - இலங்கை கடல் எல்லையில் இருந்து 4 மைல் தொலைவு இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததால், இவர்கள் கைதுசெய்யப்பட்டு, காரைக்கால் கொண்டுவரப்பட்டனர். பிறகு அவர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

லைலா, சுருக்கு வலைகளின் பாவனைக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இவர்கள் நேற்று நாகப்பட்டினத்திலிருந்து சென்னை அழைத்துவரப்பட்டு, சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்திரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மார்ச் 23ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு:

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

இலங்கையில் கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்து - 7 மீனவர்கள் மீட்பு

மன்னாரில் மீனவர்கள் சாலை மறியல்

யாழ்ப்பாணத்தில் அத்துமீறி மீன் பிடித்ததாக 5 இந்திய மீனவர்கள் கைது

இழுவை மீன்பிடி, இந்திய மீன்பிடிக்கு எதிராக யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்