நீதிமன்றங்கள் மனித உரிமைகளை காக்க வேண்டும்: இலங்கை புதிய தலைமை நீதிபதி வலியுறுத்தல்

மக்களின் மனித உரிமைகளை காப்பதே நீதிமன்றங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றுஇலங்கையின் புதிய தலைமை நீதிபதி ப்ரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA
Image caption இலங்கையின் 45- வது தலைமை நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார் ப்ரியசாத் டெப்

இலங்கையின் 45 வது தலைமை நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட ப்ரியசாத் டெப் இன்று கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் நீதிபதிகள் உயர்ந்த குணங்களுடன் செயல்படுவது அவசியமென்று அவர் தெரிவித்தார்.

அரசியல் சாசனம் மற்றும் சட்டத்தை காக்க சகல நீதிபதிகளும் கடமை பெற்றுள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி இதன் முலம் மாத்திரமே பொது மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க முடியுமென்று கூறினார்.

வழக்கு விசாரணைகளின் போது ஏற்பட்டுள்ள தாமதங்களை தடுக்க உச்ச நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்று கூறிய தலைமை நீதிபதி, வழக்கு விசாரனைகளின் போது புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை பயன்படுத்துவது அவசியமென்று தெரிவித்தார்.

அதேபோன்று வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்த காரணமாகவுள்ள சில சட்ட விதிமுறைகளுக்கு திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்