இலங்கையில் கிண்ணியா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

  • 28 மார்ச் 2017

கிண்ணியா அரசினர் மருத்துவமனையை தரம் உயர்த்தி, அதன் நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கிண்ணியா பழைய வைத்தியசாலையின் முன்னே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ருப், எம்.எஸ் தெளபீக் மற்றும் இம்ரான் மஹ்ருப் உட்பட பெரும் திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

கிண்ணியா அரசினர் வைத்திய சாலையை தரம் உயர்த்த வேண்டும், சுகாதார அமைச்சகம், கிண்ணியா வைத்தியசாலையின் நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறுகையில், கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலின் விளைவாக 14க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; இந்த நிலையில் வைத்தியசாலையை தரம் உயர்த்தி இதற்கான மருத்துவ வசதிகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும்., இதன் மூலமே மக்களுக்கான சிறந்த சுகாதார சேவையினை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்