சந்தியா ஏக்னலிகொடாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விருது

இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது`` வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Embassy of the United States of America

இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது`` வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி, மெலனி டிரம்ப் மற்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சில், அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் தாமஸ் ஏ.ஷான்ன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இலங்கையில் போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பாகவும் போராடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

சந்தியா இலங்கையில் காணாமல் போனோர் பற்றிய தகவல்களை கோரி போராடிவரும் பல பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை சந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று இலங்கைக்கான அமெரிக்கதூதர் அதுல் கேஷப் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள்

இடைவிடாத போராட்டம்

சந்தியா போன்றோரின் முயற்சிகள் இலங்கையில் உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதி ஆகியவைகளுக்காக எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை என்ற வகையில் அமெரிக்க மக்கள் அவற்றை ஆதரிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

2010ல் பிரகீத் ஏக்னலிகொடா காணாமல் போனதிலிருந்து சந்தியா, இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்க்க் கோரியும், இந்த சம்பவத்திற்கான பதில்களைத் தேடியும், சுமார் 90 முறைக்கும் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கையின் பிற பகுதிகள் முழுவதும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்பட அவர் தொடர்ந்து பயணம் செய்கிறார்.

பிரகீத் எக்னிலிகொட காணாமல் போன வழக்கு: இராணுவம் மீது மனைவி புகார்

எக்னளிகொட வழக்கு விசாரணையை சீர்குலைக்க சதி: மனைவி குற்றச்சாட்டு

வி்ருது பெறும் இரண்டாவது இலங்கையர்

இந்த விருதுகளுக்கு சந்தியாவைத் தவிர உலகெங்கிலுமிருந்தும் வேறு 12 பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

''உண்மையை தேடுவது குற்றமல்ல. குற்றம் புரிந்தவர்களை பாதுகாப்பது தான் குற்றம்,'' என தனது பிரசாரத்தை பற்றி கூறுகிறார் சந்தியா.

குழந்தை திருமணம், ஆட்கடத்தல், பாலினம்-சார்ந்த வன்முறை, மதநல்லிணக்கம் மற்றும் உறவுகளை மேம்படுத்துவது, சுற்றுசூழலை பாதுகாப்பது என பல்வேறு துறைகளில் வேலை செய்யும் 13 நபர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்வார்கள். அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்ட விதம் பற்றி பேசி மற்றவர்களை ஊக்குவிப்பார்கள்.

2007ல் தொடங்கப்பட்ட இந்த விருது , இதுவரை சுமார் 60 நாடுகளை சேர்ந்த 100 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் விருது பெற்றவர்களில், போரினால் இடம் பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்காக போராடும், புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிலா மஜீத்தும் அடங்குவார்.

தலைமை மற்றும் தைரியம் பற்றி பேசும் போது ''எப்போதும் விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதுமட்டும்தான் முக்கியம்,'' என சந்தியா கூறினார்.

நீங்கள் என்ன விதமான பிரச்சனைகளை நீங்கள் தற்போது எதிர்கொண்டாலும், உங்களுக்கு சாதகமாக விஷயங்கள் நிச்சயமாக உண்டு,'' என சந்தியா தெரிவித்தார்.

ஏக்நலிகொட காணாமல்போய் 1000 நாட்கள்; உறவினர்கள் ஐநாவிடம் மகஜர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்