கிண்ணியாவில் இலங்கை ஜனாதிபதி திடீர் ஆய்வு

  • 1 ஏப்ரல் 2017

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கிண்ணியாவுக்கு திடீர் பயணம்மேற்கொண்டு அங்கு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் உள்பட அங்கிருந்த நோயாளிகளை பார்வையிட்டார்.

கிண்ணியாபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை மாலை கிண்ணியாக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

அப்போது கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டம்

தீவிரமடையும் டெங்கு: கிண்ணியாவில் 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்

அங்குள்ள நோயாளிகள் அனுபவித்து வருகின்ற குறைபாடுகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய தேவைகள் தொடர்பாக ஜனாதிபதி மக்களை கேட்டறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிண்ணியா மருத்துவமனையை தரமுயர்த்துமாறு பழைய மருத்துவமனையின் முன்னே கடந்த 5 தினங்களாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளோரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

திருகோணமலையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் - மக்கள் அச்சம்

திருகோணமலையில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இந்த சந்திப்பின்போது மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாகவும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்துள்ளனர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்