இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவும் ஆபத்து: யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image caption எச்1 என்1

கடந்த மூன்று மாத காலத்தில், நாடு முழுவதும், 500ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் எச்.1 என்1 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று மாத காலத்தில், இரு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 மரணங்கள் பதிவாகியுள்ளன. 115 நோயாளர்கள் அடையாம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில், மாத்தளை மாவட்டதில் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை அதிக மரணங்கள் கண்டி மாவட்டத்திலே அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

கண்டி மாவட்டம் - 40 பேர் , மாத்தளை மாவட்டம் - 73 பேர், நுவரெலியா மாவட்டம் - 02 என மொத்தம் 115 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனம் காணப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 12 மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டம்

இந்த தகவல்களை உறுதிப்படுத்திய மாகாண சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் டாக்டர் சாந்தினி சமரசிங்க, "கர்ப்பிணிகள், முதியவர்கள், நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கவனத்துடன் இருக்க வேண்டும் '' என்கின்றார்.

''குறித்த வகையினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்படும் போது மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து உண்டு'' என்றும் சுட்டிக்காட்டிய அவர் '' சுகதேகியான ஒருவருக்கு இந் நோய் ஏற்பட்டால் சாதாரணமாக குணமாகிவிடும் ' என்கின்றார்.

பிற செய்திகள்

கிண்ணியாவில் இலங்கை ஜனாதிபதி திடீர் ஆய்வு

மத்திய மாகாணத்தில் ஏற்கனவே 2009ல் எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் தீவிர நிலை காணப்பட்டது. பின் 2014ம் ஆண்டிலும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

''2009 ஆண்டு காணப்பட்ட தீவிரமான நிலையுடன் ஓப்பிடும் போது அது போன்ற நிலை 2017ல் இல்லை'' என்கின்றார் டாக்டர் சாந்தினி சமரசிங்க.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் எச்1 என்1 நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்1 என்1 என சந்தேகிக்கப்படும் 3 மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார தினைக்களம் தெரிவிக்கின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற வழமையான காய்ச்சல் அறிகுறிகளுடன், மூச்சுவிடுதலில் சிரமமாயிருத்தல் அல்லது நீண்ட நாட்களாக நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை மக்கள் நாடவேண்டும் என்றும் மருத்துவர்களினால் ஆலோசனை வழங்கப்படுகின்றது.

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் - மக்கள் அச்சம்

பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக எச்.1 என்1 காய்ச்சல் இல்லாத போதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசநோய்கள், நீரிழிவு நோய்கள் அல்லது இருதய நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் பாதி்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகி்ன்றது.

ஆரம்பத்தில் நம்பப்பட்டவாறு பன்றிகளைத் தாக்கும் ஒருவகை வைரஸூக்கும் தற்போது மனிதர்களைத் தாக்கும் எச்.1 என்.1 தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் தொற்று நோயியல் நிபுணர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்