போலீஸ் ஒருவர் கொல்லப்பட்ட பாரிஸ் தீவிரவாத தாக்குதல் சந்தேக நபர் சுட்டுகொலை

  • 21 ஏப்ரல் 2017

பாரிஸின் மத்திய பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் பாதுகாப்பு படைப்பிரிவுகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடுவதற்கு முன்னால் கொல்லப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

ஃபிரான்ஸில் தொடங்கவிருக்கும் பாரிஸ் தாக்குதலின் ஒராண்டு நிறைவு நிகழ்ச்சி

பாரிஸ் தாக்குதலாளியை தேடும் நடவடிக்கையில் பெல்ஜிய பிரஜை கொலை

இந்த சம்பவம் இடம்பெற்ற பாரிஸின் சேம்ப்ஸ் எலிஸீ பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தாக்குதல் தீவிரவாதத்தோடு தொடர்புடையது என்று நம்புவதாக அதிபர் பிரான்சுவா ஒலாந்த் தெரிவித்திருக்கிறார்.

தங்களுடைய ஆயுதப்படையினரில் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

காணொளி: சோபை இழந்த பாரிஸ் கிறிஸ்துமஸ்

எஃஎப்பி செய்தி நிறுவனத்தின் தரவுகள்படி, 2015 ஆம் ஆண்டிலிருந்து 238 பேர் பிரான்சிஸில் ஜிகாதிகளின் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அரசு அமைப்பால் பொறுப்பேற்கப்படும் மக்கள் பலர் மீது நடத்தப்பட்டுள்ள சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணமான இஸ்லாமியவாத தீவிரவாதம், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சனையாக உள்ளது.

காணொளி: காவல்துறைக்கு எதிராக பற்றி எரியும் பாரிஸ் புறநகர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காவல்துறைக்கு எதிராக பற்றி எரியும் பாரிஸ் புறநகர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்