இலங்கை பெட்ரோலியத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் : எரிபொருள் விநியோகம் பாதிப்பு

  • 24 ஏப்ரல் 2017

இலங்கையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஊழியர்களின் வேலைநிறுத்ததால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது போராட்டத்தின் காரணமாக நாடு முழுவதிலும் எரிபொருள் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபான தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கையை விரைவுப்படுத்துவார் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபான தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால், இது தொடர்பான இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது.

இதனிடையே தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இன்று திங்கள்கிழமை நடக்கவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக எரிபொருள் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களப் பண்ணைகளை வடமாகாண சபை கோருவதற்கு எதிர்ப்பு

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு தடுப்பூசி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்