கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை: சிறிசேன அதிருப்தி

  • 29 ஏப்ரல் 2017

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை திருப்தியளிப்பதாக இல்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த அவர் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய அவர் '' இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் கிழக்கு மாகாணத்தின் கல்விப் பெறுபேறுகள் குறித்து திருப்தி கொள்ளவோ அல்லது மகிழ்ச்சியடையவோ முடியாது '' என்றார்.

யுத்த காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் கல்வி பாதிக்கப்பட்டிருந்ததையும் தனது உரையில் சுட்டிக் காட்டிய ஜனாதிபதி '' வட மாகாண கல்வி நிலையை பொறுத்தவரை பரீட்சை பெறுபேறுகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை காண முடிகின்றது '' என்றும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை முன்னேற்ற மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து சிறப்பு வேலைத் திட்மொன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட அமைச்சர்கள் , ராஜங்க அமைச்சர்கள் , துணை அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்கலாம்:

இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

இலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்