சர்ச்சையைக் கிளப்பும் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணம்

  • 29 ஏப்ரல் 2017

இலங்கைக்கு அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம் தவிர வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கைளிலும் ஈடுபடமாட்டார் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி, மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

புத்தர் ஞானம் பெற்ற தினமாகிய வைகாசி பௌர்ணமி தினம் பௌத்தர்களினால் வெசாக் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது இந்த வருடம் ஐ.நா வின் சர்வதேச வெசாக் நிகழ்வு அடுத்த மாதம் 10, 11-ஆம் தேதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ளன.

இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை செல்லவிருக்கின்றார்.

நரேந்திர மோதியின் இந்த வருகை தொடர்பாக உள்நாட்டில் சிலரால் ஏற்கெனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அவர், அரசுக்கு எதிரான சில நபர்களால் அவரது வருகைக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

''இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ. நா.வின் சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி வருகைதர உள்ளார். நாட்டில் சில பகுதிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு அவர் வருகை தருவதாக சில சமூக வலைத் தளங்களிலும் இணையங்களிலும் உண்மைக்கு மாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்திய பிரதமரின் நிகழ்ச்சி நிரல் வெசாக் நிகழ்வை மட்டும் தான் கொண்டுள்ளது. அதனைத் தவிர அவர் வேறு எந்தவொரு ஒப்பந்தத்திலோ அல்லது நிகழ்ச்சி திட்டங்களிலோ உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட மாட்டார் '' என்றும் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்கலாம்:

இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

இலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

வடகொரிய கடலில் அமெரிக்காவின் புதிய விமானந்தாங்கிக் கப்பல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்