கண்டியில் குப்பைமேடு இடிந்து விழும் அபாயம்: மக்கள் அச்சம்

  • 2 மே 2017

கண்டி மாவட்ட கொஹாகல பகுதியில் அமைந்துள்ள பாரிய குப்பைமேடு இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Image caption கண்டியில் குப்பைமேடு இடிந்து விழும் அபாயம்

சுமார் 35 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் இந்த குப்பைமேடு அமைந்துள்ளது.

கண்டி நகர சபை மற்றும் ஹாரிஸ்பத்துவ நகர சபை பிரதேசங்களில் இருந்து அகற்றப்படும் குப்பை கடந்த சுமார் 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த குப்பைமேட்டில் சில பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பகுதிவாசிகள் அதன் சரிவுகள் ஏற்பட்டால் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

குப்பைமேட்டில் புதையுண்டவர்களை தேடும் பணியில் முப்படை

கொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

இந்த குப்பைமேடு காரணமாக டெங்கு காய்ச்சல் உற்பட ஆபத்தான நோய்கள் பரவி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதே போன்று குப்பைமேடு காரணமாக மகாவலி கங்கையின் நீர் மாசடைந்து வருவதாக தெரிவித்துள்ள பிரதேசவாசிகள், இதன் மூலம் பாரிய சூழல் பிரச்சனைகள் உருவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய மாகான சபையின் அதிகாரி ஒருவர் இந்த குப்பைமேடு குறித்து மாகாண அதிகாரிகள் தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்தார்.

குப்பைமேடு அமைந்துள்ள பகுதியில் மேலும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்துவது சம்பந்தமாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பாயிசர் முஸ்தபா மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இடையே பேச்சுவார்த்தைவிரைவில் நடைபெறவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்

திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்தால் கைதான சீன மணமகன்

ஓய்வறியா உழைப்பால் மரணிக்கும் ஜப்பானியர்கள்

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்