முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு)

  • 18 மே 2017

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு.

Image caption முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Image caption முந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இவ்வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image caption கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை; நகரில் கடையடைப்பு

Image caption யுத்தம் மீண்டும் ஏற்படாதிருக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் அதற்கமைய ஆட்சிமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் : இரா. சம்பந்தன்
Image caption முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் விளைவுகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் : வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இன்னொரு யுத்தம் நடக்காமல் தடுக்கப்படுமா? சம்பந்தன் கேள்வி

Image caption பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்ககளும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு

Image caption சிவப்பு மஞ்சள் நிற கொடிகளுடன் கூடிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Image caption இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நந்திக்கடலில் மலர்கள் மிதக்கவிடப்பட்டன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு 'காவல்துறை தடை

Image caption கண்ணீர் சொரிந்து வாய்விட்டு அழுது அரற்றிய தாய்மாரின் சோக வெளிப்பாடு இந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது.

'வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி'

Image caption கண்ணீர் விட்டு அழுத பெண்களின் துயரம்
Image caption முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்