இலங்கையில் காணாமல் போனவர்களைக் கண்டறிய விரைவில் சிறப்புக்குழு: ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படுபவர்கள் குறித்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டால் அந்த இடத்தை சோதனையிட அரசாங்கத்தினால் சிறப்பு வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த அவர் திருகோணமலை மாவட்டம் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய வைத்தியசாலை கட்டடத் தொகுதி மற்றும் கலாச்சார மண்டபம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் " காணாமல் போனவர்கள் தொடர்பாக இதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆணைக் குழு அறிக்கையின் சிபாரிசுகளை கருத்தில் கொண்டு காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு சிறப்பு குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும் '' என்றும் கூறினார்.

''காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகமொன்றை அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் திருத்தம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது" என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

2015ம் ஆண்டு தான் யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை தனது உரையில் நினைவுபடுத்திய ஜனாதிபதி அந்த புகைப்படத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு அம் மாணவர்களும் காணாமல் போயுள்ளதாக தனக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இந்த பிரசாரம் அடிப்படைவாத அரசியல்வாதிகளின் சதி. அவ்வாறு காணாமல் போயுள்ள சம்பவமொன்நு இடம் பெற்றிருக்குமானால் அவர்களை கண்டறிவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தான் தயார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் , மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ , எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் , மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். எம். நசீர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள் :

செளதி வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்; தயார் நிலையில் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள்

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்?"

இரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்