இலங்கை அமைச்சரவையில் முக்கிய மாற்றம்

இலங்கை மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்படி 9 காபினட்அமைச்சர்களும், ஒரு ராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Image caption நிதி மற்றும் ஊடக அமைச்சரானார் மங்கள சமரவீர

ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் பதவிப் பிரமாணம் நடைபெற்றது. பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களின் இலாக்காக்கள் பின்வருமாறு:-

01.மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடக அமைச்சர்

02.ரவி கருணாநாயக்கா - வெளி விவகார அமைச்சர்

03.அர்ஜுனா ரணதுங்க - பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

04. எஸ்.பி திஸநாயக்கா - சமூக மேம்பாடு அபிவிருத்தி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர்

05.ஜோன் செனவிரத்ன - தொழில் , தொழிற்சங்க மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர்

06. மகிந்த சமரசிங்க - துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சர்

07. சந்திம வீரக்கொடி - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர்

08.கயந்த கருணாதிலக - காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

09. திலக் மாரப்பன சிறப்பு அபிவிருத்தி அமைச்சர்

9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் தற்போதைய மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மகாவலி அபிவிருத்தி ராஜங்க அமைச்சராகவும் பதவியேற்றிருக்கின்றார்

குறித்த அமைச்சர்களில் 8 அமைச்சர்களின் அமைச்சக பதவிகளிலே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே பதவி வகித்த அமைச்சுக்கள் பின்வருமாறு:-

01. மங்கள சமரவீர - வெனிவிவகார அமைச்சு

02. ரவி கருணாநாயக்கா - நிதி அமைச்சு

03.அர்ஜுன ரணதுங்க - துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சு

04.எஸ்.பி திஸநாயக்கா - சமூக மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சு

05.ஜோன் செனவிரத்ன - தெரில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு

06. சந்திம வீரககொடி - பெற்றோலிய வள அமைச்சு

07. மகிந்த சமரவீர - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்ச்சி அமைச்சு

08. கயந்த கருணாதிலக - நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடக அமைச்சு

புதிய அரசாங்கம் பதவியேற்றிருந்த வேளையில் சட்டம் . ஓழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக அமைச்சர் திலக் மாரப்பன பதவியேற்றிருந்தார். அவரால் வெளியிட்ட கருத்தொன்றின் காரணமாக எழுந்த சர்ச்சையையடுத்து சில மாதங்களின் பின்னர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்:

பரபரப்பான 1 ரன் வெற்றி: மும்பை அணிக்கு ஐபிஎல் கோப்பை சாத்தியமானது எப்படி?

`பலி' ஆடுகளாகப் பரிதவிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள்

அழகாக ஜொலிக்க ஆசைப்படுகிறீர்களா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்