இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரணில் வேண்டுகோள்: பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் எதிரொலி?

  • 24 மே 2017

இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்று கூறிய விக்ரமசிங்க, இனவாத செயல்கள் காரணமாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகள் பின்னடைவு காணும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.

சட்டத்தை மீறும் மற்றும் இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போலீசாரின் முக்கிய கடமையென்று கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போலீசார் தனது கடமைகளை பாரபட்சமின்றி நிறைவேற்ற முன்வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அண்மை தினங்களில் குருநாகல், கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சில முஸ்லீம் பள்ளி வாசல்கள் தாக்கபட்டுள்ள போதிலும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டிய சந்தேக நபர்கள் இதுவரை போலீசாரால் கைது செய்யப்படவில்லை.

இந்த தாக்குதகள் சம்பந்தமாக பொதுபலசேனா அமைப்பு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம் :

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் மரணம்

புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் மரணம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்