இலங்கை வெள்ளம்: ஹெலிகாப்டரில் குழந்தை பெற்றெடுத்த பெண்

  • 29 மே 2017
படத்தின் காப்புரிமை Chris McGrath/Getty Images
Image caption கோப்புப் படம்

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சுகப் பிரசவம் நடைபெற்றது.

இன்று திங்கட்கிழமை கலவான அரசாங்க வைத்தியசாலையிலிருந்து இரத்தினபுரி பிரதான வைத்தியசாலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த வேளை தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.

தாயும் குழந்தையும் இரத்தினபுரி பிரதான வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இன்று திங்கட்கிழமை நண்பகல் வெளியிட்டுள்ள தகவலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிழந்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 102 ஆக குறைந்துள்ளதாகவும் காயமுற்றோரின் எண்ணிக்கை 88 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக இரத்தினபுரி - 71, களுத்துறை - 53 , மாத்தறை -21 காலி -12 , அம்பாந்தோட்டை -05 . கேகாலை -04 மற்றும் கம்பகா -03 என 169 பேர் பலிாகியுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை - 58 , இரத்தினபுரி -20, மாத்தறை -14 மற்றும் காலி - 10 பேர் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 102 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

இது தொடர்பான பிற செய்திள்:

இலங்கை நிலச்சரிவு: நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

இலங்கை வெள்ளம், நிலச்சரிவு: பலி,காணாமல் போனோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்