இலங்கையில் அமைச்சரவையில் மாற்றம்

இலங்கையில் அமைச்சரவையில் அண்மையில் இடம்பெற்ற மாற்றத்தையடுத்து வெளிவிவகார துணை அமைச்சர் மற்றும் நிதி ராஜாங்க அமைச்சர் உட்பட 7 ராஜங்க மற்றும் இரு துணை அமைச்சர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இராஜாங்க மற்றும் துணை அமைச்சர் பதவி வகித்த ஏழு பேர் இந்த மாற்றத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பொறுப்புக்கான பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இராஜங்க அமைச்சர்கள்

01. லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன - அரச தொழில் முயற்சிகள்

02. ஏரான் விக்கிரமரட்ன - நிதி

03. வசந்த சேனநாயக்கா - வெளிவிவகாரம்

04.பாலித்த ரங்கே பண்டார - நீர்ப்பாசனம்

துணை அமைச்சர்கள்

01 ஹர்ஷா டி சில்வா - தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரம்

02.ரஞ்சன் ராமநாயக்கா - சமூக வலுவுட்டல் , நலன்புரிகள் மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் விவகாரம்

03 கருணாரட்ன பரனவிதானகே - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்ச்சி.

புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்கள் ஏற்கனவே வேறு அமைச்சுக்களில் இராஜாங்க மற்றும் துனை அமைச்சர்களாகவும் பொறுப்புகளை வகித்தவர்கள்.

01. லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தனா - ராஜாங்க அமைச்சர் நிதி

02. வசந்த சேனநாயக்கா - - ராஜாங்க அமைச்சர் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளம்.

03. பாலித்த ரங்கே பண்டா - ராஜாங்க அமைச்சர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி .

04.ரஞ்சன் ராமநாயக்கா - துணை அமைச்சர் சமூக வலுவுட்டல் மற்றும், நலன்புரிகள்

05. கருணாரத்ன பரணவிதானகே - துணைஅமைச்சர் நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் தகவல்

06. ஏரான் விக்கிரமரட்ன - துணை அமைச்சர் அரச தொழில் முயற்ச்சிகள் துனை அமைச்சர்

07. ஹர்ஷா டி சில்வா . - வெளி விவகார துணை அமைச்சர்

இதையும் படிக்கலாம்:

திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: கட்சிகள் கண்டனம்

மாநில முதல்வர்களை அணி திரட்டும் கேரள முதல்வர் விஜயன்

மாடுகளை இறைச்சிக்காக விற்கத் தடை: தமிழகக் கட்சிகள் கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்