இலங்கை: வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 79 பேரை காணவில்லை

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில், 79 பேரை தொடர்ந்து காணவில்லை. இவர்களை தேடும் பணி தொடருகின்றது.

இலங்கை விபத்து

களுத்துறை மாவட்டத்தில் கூடுதலானோர் காணாமல் போயுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் வெளியிடப்பட்ட தகவல் அறிக்கையில் 224 உயிரிழப்புகளும் 78 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட தகவல் அறிக்கையில் அதில் மாற்றம் செய்யப்பட்டு 212 பலியாகியுள்ளனர், 79 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் மரணங்களின் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பான பிற செய்திகள்:

கேகாலை மாலட்டம் -04 , களுத்துறை மாவட்டம் - 65 , கம்பகா மாவட்டம் - 04 , மாத்தறை மாவட்டம் -31 , அம்பாந்தோட்டை மாவட்டம் -05 , காலி மாவட்டம் - 15 மற்றும் கண்டி மாவட்டம் -01 என்ற எண்ணிக்கையில் 212 மரணங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன.

ரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 15 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 50 பேரும் என 79 பேரை காணவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள பிந்தைய தகவல் அறிக்கையின்படி, பாதிப்புக்குள்ளாள குடும்பங்களின் எண்ணிக்கை 1இலட்சம் 84 ஆயிரத்து 268 என அதிகரிப்பை காண முடிகின்றது.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த குடும்பங்களில் அநேகமான குடும்பங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 7 ஆயிரம் . குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரமாக குறைந்துள்ளது.

2313 வீடுகள் முழுமையாகவும், 12529 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என இதுவரை மதிப்பீடு செய்யப்பட்டுள்தாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்