இலங்கை - கத்தார் இடையே வழக்கம் போல் விமான சேவை நடைபெறும்: இலங்கை அறிவிப்பு

கத்தார் ரியலை இலங்கை நாணயமாக மாற்றும் நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

அத்தோடு சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஐந்து நாடுகள் கத்தாருடன் முரண்பட்டுள்ளமை அங்கு பணி புரியும் இலங்கையருக்கும், கத்தார்-இலங்கைக்கு இடையிலான ராஜிய உறவுகளுக்கும் தொடர்புடைய விஷயமல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கத்தார் ரியலை இலங்கை நாணயமாக மாற்றும் நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளார்.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடனான ராஜிய உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்ததையடுத்து, அப்பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

கத்தாருக்கான தரை மற்றும் கடல் வழி போக்குவரத்துக்களை இந்நாடுகள் நிறுத்தியுள்ள நிலையில், எகிப்து வான் வழி போக்குவரத்துக்களையும் நிறுத்தியுள்ளது.

கத்தாரில் இலங்கையர் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் பணி புரிந்து வருவதுடன், தற்போதை நிலைமை அவர்களுடன் நேரடி தொடர்புடையவை அல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அத்தோடு இலங்கை கத்தாருக்கிடையிலான விமான சேவையும் வழக்கம் போல் நடைபெறுவதாக அமைச்சம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பிற செய்திகள்:

கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

கத்தார் அதன் அண்டை நாடுகளுடன் முரண்பட 4 காரணங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்