புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: முதல் முறையாக பிரிட்டனின் மின்சாரத் தேவையில் பாதிக்கும் மேல் வழங்குகிறது

  • 10 ஜூன் 2017

பிரிட்டனில், முதன்முறையாக, நிலக்கரி மற்றும் எரிவாயுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைவிட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதிக மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த புதன்கிழமை மதியம், காற்று, சூரியன், நீர் மற்றும் மரச் செதில்களை எரிப்பது ஆகியவற்றிலிருந்து 50.7% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக நேஷனல் கிரிட் தெரிவித்தது.

அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தையும் சேர்ந்தால், அன்று மதியம் இரண்டு மணியளவில் குறைந்த கார்பன் மூலங்கள் வெளியிடும் மின்சாரம் 72.1% அளவு உற்பத்தி செய்திருக்கிறது.

ஐரோப்பாவின் வடபகுதி முழுவதும் காற்றாலை மூலம் மின் உற்பத்தியில் புதிய சாதனைகள் செய்யப்பட்டுவருகின்றன.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

பிரிட்டன் முழுவதும் மின்சார விநியோகம் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளும் நேஷனல் கிரிட் அமைப்பு வெளியிட்ட ட்வீட் செய்தியில், "இன்றைய மதிய உணவு இடைவேளையின் போது காற்று, சூரியன் மற்றும் அணுசக்தி ஆகியவை நிலக்கரி மற்றும் எரிவாயுவைவிட அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன," என்று கூறியது.

செவ்வாய்க்கிழமையன்று, பிரிட்டனின் பத்தில் ஒரு பங்கு மின்சாரம் கடற்கரைக்கப்பால் கடலுக்குள் இருக்கும் காற்றாலைகள் மூலமாக உற்பத்தியானது. மின்சார உற்பத்தியில் புதிதாக வந்த காற்றாலைகள், எதிர்பார்த்ததைவிட மிக துரிதகதியில் செலவை குறைத்தன.

எரிமலையிலிருந்து எரிசக்தி: எதிர்காலத்தை மாற்றுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எரிமலையிலிருந்து எரிசக்தி எதிர்காலத்தை மாற்றுமா?

எனவே, அதிக மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. சொல்லப்போனால் மின்சார உற்பத்தி செலவு பத்தில் ஒரு பங்காக குறைந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

இந்த புதிய சாதனை, குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கிய ஒரு மைல்கல் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நிறுவப்பட்ட ஆற்றல் அமைப்பிற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் ஏற்படும் இடையூறுகளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுவார்கள்.

புதன்கிழமையன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தி சாதனை அளவை எட்டியபோது, ஒரு சதவிகித தேவை சேமிப்பில் இருந்து பயன்படுத்தப்பட்டது. குறைந்த கார்பன் வெளியிடும் மின்சார உற்பத்தியை நோக்கி முன்னேறும் பிரிட்டனின் முயற்சிக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் இந்த அளவு அதிகப்படுத்தப்பட வேண்டும்.

சீனா: மின்சார காருக்கான அரச மானியம் காற்று மாசைக் குறைக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சீனா: மின்காருக்கான அரச மானியம் காற்று மாசைக் குறைக்குமா?

பிற செய்திகள்

“எனது அரசு ஸ்திரத்தன்மை வழங்கி, நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும்” - தெரீசா மே

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

தமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்