விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதைத் தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை-சுசாந்திக்கா

  • 10 ஜூன் 2017

தனது ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை 25 கோடி ரூபா விலை கொடுத்து வாங்குவதற்கு சிலர் முன் வந்துள்ளதாக முன்னாள் ஓட்டப்பந்தைய வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் தனது ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய போவதாக தான் ஊடகங்கள் மூலம் அறிவித்த பின்னர் அதனை வாங்குவதற்கு பலர் தன்னை தொடர்ப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜப்பான், இந்தியா ,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பலர் தன்னை தொடர்ப்புக் கொண்டுள்ளதாக கூறிய சுசந்திக்கா ஜெயசிங்க அவர்கள் வெள்ளி பதக்கத்திட்கு 25 கோடி ரூபாவரை விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாக அறிவித்தார்.

ஆனால் தனது பதக்கத்தை அதற்கும் பார்க்க அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியுமென்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளின் போது வெல்லப்படும் பதக்கங்களை விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டமொன்றை விரைவில் கொடுவரவுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சட்டமொன்றை கொண்டுவர முடியாதென்று கூறிய சுசந்திக்கா ஜயசிங்க சர்வதேச விளையாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமைய பதக்கங்கள் அதனை வெல்லும் வீரர் அல்லது வீராங்கனைக்கு மாத்திரமே சொந்தமானதென்று தெரிவித்தார்.

எனவே அதனை விளையாட்டு அமைச்சுக்கு பறிமுதல் செய்ய அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவர் கூறினார்.

விளையாட்டு அமைச்சின் சில அதிகாரிகள் அமைச்சரை தவறாக வழிநடத்தி செல்கின்ற காரணத்தினால் அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை கூறிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பிற செய்திகள்:

விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதைத் தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை-சுசாந்திக்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்