மும்பை 1993 குண்டு வெடிப்பு வழக்கு : 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு

  • 16 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை AFP
Image caption மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 713 பேர் காயமுற்றனர்.

இந்தியாவில் மேற்கு மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று, 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 6 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பித்து, பின் 2005ல் போர்ச்சுகலிலிருந்து நாடு கடத்தப்பட்ட அபு சலீமும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் அடங்குவார்.

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்கள் முன்பு நடைபெற்ற கலவரத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், 257 பேர் கொல்லப்பட்டனர்.

பன்னிரெண்டு இடங்களை இலக்காக குறிவைத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

அதில், மும்பை பங்குச்சந்தை, நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் அலுவலகங்கள் மற்றும் ஒரு ஆடம்பர ஹோட்டல் ஆகியன குறிவைக்கப்படடன.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்ட தண்டனை, வழக்கு விசாரணை ஒன்றின் இரண்டாவது பகுதியாகும். இந்த வழக்கு நிறைவடைவதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 2003 முதல் 2010 வரை 7 பேர் கைது செய்யப்பட்டு தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தனர். காரணம், முந்தைய விசாரணையின் முடிவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றவியல் சதி மற்றும் கொலை குற்றங்களுக்காக குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்றினால் அறிவிக்கப்பட்டனர்.

ஏழு பேரில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த குண்டு வெடிப்பு சதிக்கு திட்டம் தீட்டி மற்றும் நிதி செலவு செய்த குற்றவாளி என அறிவிக்கப்பட்ட யாகூப் மேமன் 2015ல் தூக்கிலிடப்பட்டார்.

பிற செய்திகள் :

தாமதமாக விமான நிலையம் வந்த ஆந்திரா எம்.பி திட்டியதால் சர்ச்சை

``பறக்கும் வான்கோழி` போன்ற பறவையினம் வாழ்ந்தது கண்டுபிடிப்பு

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடி

தவறான எல்லைப்படம் : இந்திய உள்துறை அமைச்சகம் விசாரணை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்