சரணடைந்த பௌத்த கடும் போக்காளர் ஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை

  • 21 ஜூன் 2017

இலங்கையில் நீதிமன்றத்தில் சரணடைந்த பௌத்த கடும் போக்கு அமைப்பான பொது பல சேனாவின் பொது செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளுக்கு மீண்டும் சமூகமளிக்க தவறிய நிலையில் கடந்த வியாழக்கிழமை இவரை கைது செய்வதற்கான இரு பிடி ஆணைகளை கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அன்று புதன்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

இலங்கை : கலகொட அத்தே ஞானசார தேரோவை கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைப்பு

பொதுபல சேனா தடையை மீற முயன்றதால் மட்டக்களப்பில் பதட்டம்

இலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது பல சேனாவிற்கு நீதிமன்றம் தடை

கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, ஜாதிக பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கொம்பனி தெரு போலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்ற பத்திரிகையாளார்கள் சந்திப்பில் இஸ்லாத்தையும் அல் குர் ஆனையும் அவமதித்தும் நிந்தித்தும் கருத்து வெளியிட்டமை தொடர்பாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிஸாரால் இவருக்கு எதிராக தனித் தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் ஏற்கனவே இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதே வேளை போலிஸாரின் கடமைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது மற்றும் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டு அதற்கு தூண்டும் வகையிலான செயல்பாடுகள் குறித்து போலிஸாரால் இவர் தேடப்பட்டும் வந்தார்.

இவரை கைது செய்வதற்கு 4 சிறப்பு போலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே போலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

''1000 லைக்குகள் வேண்டும் இல்லையெனில் குழந்தையை தூக்கி போட்டுவிடுவேன்''

திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா?

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்