டெங்கு கொசுக்களை, உருவாக்கப்பட்ட கொசுக்களால் ஒழிக்க இலங்கை திட்டம்

டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை அழிப்பதற்கு புதிய இரண்டு வகை கொசுக்களை உருவாக்கியுள்ளதாக இலங்கை அரசு மருத்துவ பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை CDC

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்த நிலையத்தின் சிறப்பு வைத்திய நிபுணர் சாகரிகா சமரசிங்க, இந்த இரு கொசு வகைகளை தனது நிலையத்திலுள்ள பரிசோதனை கூடத்தில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இரு வகை கொசுக்களை, பொதுவாக கொசுக்கள் பரவுகின்ற இடங்களில் பரப்பி விடுவதன் முலம் டெங்கு காய்ச்சல் பரப்புகின்ற கொசுக்களை ஆரம்பக் கட்டத்திலேயே அழித்துவிடலாம் என்று அவர் கூறினார்.

இந்த புதிய இரு கொசு வகைகளை தற்போது மீரிகம, கண்டலம, குண்டசாலை, பேராதெனிய ஆகிய பிரதேசங்களில் பரப்பியுள்ளதாக தெரிவித்த வைத்திய நிபுணர் சமரசிங்க இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த கொசுக்களை டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படும் நகர் பகுதிகளில் பரப்புவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இதன் முலம் மட்டுமே டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்திவிட முடியாதென்று கூறிய மருத்துவர் சமரசிங்க, மக்களின் ஒத்துழைப்பு இதற்கு மிகவும் அவசியமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை : டெங்கு காய்ச்சலுக்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள்

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா பாக்டீரியாவை பயன்படுத்த திட்டம்

இலங்கை: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதா?

இலங்கை: கடந்த ஆண்டை காட்டிலும் மிகவும் அதிகரித்துள்ள டெங்கு நோய்

பிற செய்திகள்

தென் மேற்கு சீனாவில் பயங்கர நிலச்சரிவு; பலர் புதைந்து போயுள்ளதாக அச்சம்

பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் - 9 ருசிகர தகவல்கள்

தடை வதந்திகளை மீறி நாய் இறைச்சித் திருவிழா!

சீனாவில் தோலை தைத்துக் கொள்ளும் புதிய ஃபேஷன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்