இலங்கை : ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்; முடங்கியது தபால் சேவை

படத்தின் காப்புரிமை Getty Images

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சுமார் ஐந்து லட்சத்திட்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

சில கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் காரணமாக, 653 தபால் காரியாலயங்கள் மற்றும் 3,410 கிளை தபால் அலுவலகங்களின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கொழும்பில் இருந்து ரயில் மூலமாக தபால்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கும் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் பண்டார, 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாவும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நுவரேலியா, கண்டி, காலி ஆகிய முக்கிய தபால் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுலா நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்து செய்வது உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது கோரிக்கைகள் அரசாங்கத்தினால் நிரந்தர தீர்வு காணும் வரை பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்