கொழும்பில் பெருகிய குப்பைகளால் சுற்றுலா பாதிப்பு

  • 9 ஜூலை 2017

கொழும்பு நகரில் பெருமளவில் குப்பை குவிந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரணவக்க கொழும்பு நகரில் குவிந்துள்ள குப்பைகளை நீக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நகருக்குள் பெரிய குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால்தான், டெங்கு உட்பட பல நோய்கள் பரவியதாக கூறிய அமைச்சர் இதன் காரணமாக நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.

ஆயினும் தற்போது கொழும்பு நகரில் நீக்கப்படாமல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த இரு நாட்களுக்குள் 3 ஆயிரம் டன் குப்பை அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொழும்பு நகருக்குள் சட்ட விரோதமாக குப்பைகளை வீதிகளில் வீசும் நபர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், அவ்வாறு 1500கும் மேற்பட்டோர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்