இலங்கை: சிறைக் கைதிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை

  • 11 ஜூலை 2017

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை எய்ட்ஸ் நோய் தொடர்பான பரி்சோதனைக்கு உட்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச எய்ட்ஸ் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர். சிசிர லியனகே கருத்து தெரிவித்த போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

சிறைக் கைதிகள் மத்தியில் எய்ட்ஸ் நோய் கூடுதலாக பரவும் அவகாசம் காணப்படுவதாக கூறிய டாக்டர் லியனகே, இதன்படி முதல் கட்டமாக கைதிகளை இரத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

அதேவேளை இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களுக்குள் எச்.ஐ. வி பாதிப்பு ஏற்பட்ட 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எய்ட்ஸ் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது ஒரு பாரிய அதிகரிப்பு என்று கூறிய அந்த பணியகம், கடந்த ஆண்டு எச்.ஐ. வி பாதிப்பு ஏற்பட்ட 273 பேர் அடையாளம் காணப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனவே இவ்வருட இறுதிக்குள் 11 லட்சம் பேருக்கு எய்ட்ஸிற்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறிய அந்த பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர்.சிசிர லியனகே கடந்த ஆண்டு பத்து லட்சம் இரத்த பரிசோதனைகள் மேட்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

`எங்கள் பஸ்ஸின் முன்னால் வந்து சரமாரியாக சுட்டார்கள் '

நடிகை மீது பாலியல் தாக்குதல்: மலையாள நடிகர் திலீப் கைது

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்