இலங்கையில் பாலித்தினுக்குத் தடை வருகிறது

  • 12 ஜூலை 2017

இலங்கையில் பாலித்தீன் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சுற்றாடல் பாதுகாப்பு அதிகார வாரியத்தினால் இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணப் பத்திரம், அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவையின் தீர்மானத்தின்படி தேசிய, அரசியல், மத மற்றும் சமூக கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளின் போதும் அலங்காரத்திற்காக பாலித்தீன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மைக்ரோன் 20க்கு சமமான அல்லது அதற்கு குறைவான பாலித்தீன் பயன்பாட்டிற்கு மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார வாரியத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சமைத்த உணவுகளை பொதியிடல் மற்றும் பொருட்களை பாலித்தீன் பைகளில் பொதியிட்டு வழங்குவதற்கும் இந்த தீர்மானத்தின் கீழ் தடை விதிக்கப்படுகின்றது.

ரெஜிபோம் பெட்டி , பிளாஸ்டிக் பிளேட், கோப்பை, கரண்டி போன்ற பொருட்களின் பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதிக்கும் தடை விதிப்பதாக அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கின்றது.

இதேவேளை லஞ்ச் சீட்ஸ், ரெஜிபோம் மற்றும் பாலித்தீன் பை பயன்பாட்டிற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்படவிருப்பதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு வாரியம் அறிவித்துள்ளது.

அது தொடர்பான சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிபிசியின் பிற செய்திகள்:

கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள்

கொடைக்கானலில் திருமணம் செய்கிறார் இரோம் ஷர்மிளா

ரஷ்ய வழக்கறிஞருடன் சந்திப்பு: `ஒன்றுமில்லாத விஷயம்` என்கிறார் டிரம்ப் மகன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்