புகையிலை கலக்கப்பட்ட மது உற்பத்தி பொருட்களுக்கு இலங்கையில் தடை விதிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

புகையிலை கலக்கப்பட்ட மது உற்பத்தி பொருட்களை இறக்குமதி மற்றும் விற்பனையை ன்று முதல் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை புகையிலை மற்றும் மதுபான ஒழிப்பு அதிகார சபையின் அறிவிப்பின்படி, புகையிலை சேர்க்கப்பட்ட வெற்றிலை கூறுகள், பான்பராக், பீடா, பாபுல் ஆகிய பொருட்கள் இறக்குமதி செய்வது மற்றும் விற்பனைக்கு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் டாக்டர். பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தினால் தனது அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

புகையிலை பயன்படுத்துவதால் மக்களுக்கு ஏற்படும் புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே போன்று அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சையளிக்க அரசாங்கம் ஆண்டுதோறும் ஐந்து பில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட நிதியை செலவிட்டு வருவதாகவும் டாகடர். பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதனை கருதி அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியுள்ள டாகடர் அபேகோன், இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தனது அதிகார சபை சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்