காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் - ஐநா வரவேற்பு

குமுறும் தாய் படத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe/Getty Images

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் காணாமல் போய் இருக்கும் 20 ஆயிரம் பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உதவி செய்வதற்காக, இலங்கை அரசு ஒரு அலுவலகத்தை நியமித்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த அலுவலகம், தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு உதவும். மேலும் அவர்கள் எப்போது எந்த சூழ்நிலையில் காணாமல் போனார்கள் போன்றவற்றை தெளிவுபடுத்தும்.

படத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe/Getty Images

இலங்கையில் நிலையான சமாதானத்தை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முப்பது வருடங்களாக போராடிவந்த பிரிவினைவாத விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ராணுவம் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :