இலங்கை: கடலில் மூழ்கிய யானைகள் கடற்படையினரால் மீட்பு

இலங்கை: கடலில் மூழ்கிய யானைகள் கடற்படையினரால் மீட்பு

பட மூலாதாரம், கடற்படை ஊடகப்பிரிவு

இலங்கையில் கிழக்கு கடலில் மூழ்கி உயிருக்காக போராடிய மேலும் இரு காட்டு யானைகள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையை அண்மித்த கடல் பகுதியில் இரு யானைகளும் கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

கடல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு, வன ஜீவராசிகள் துறை அதிகாரிகளின் ஓத்துழைப்பு பெறப்பட்டு இரு யானைகளும் காப்பாற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாக, இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், கடற்படை ஊடகப்பிரிவு

பட மூலாதாரம், கடற்படை ஊடகப்பிரிவு

இந்த மீட்பு பணியில் கடற்படையின் மூன்று தாக்குதல் படகுகளும், சுழியோடிகள் குழுவொன்றும் ஈடுபட்டிருந்ததாகவும், கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இது போன்று இம்மாதம் 11ம் தேதி கொக்குதொடுவாய் கடலில் சிக்கிய காட்டு யானையொன்றும் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு காட்டுக்குள் விடப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :