குவைத்தில் நிர்க்கதியாக தவித்த இலங்கை பெண்களில் 51 பேர் நாடு திரும்பினர்

கோப்புப்படம்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இலங்கையிலிருந்து குவைத் நாட்டிற்கு வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு சென்று துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக இலங்கை தூதரகத்தில் தஞ்சம் பெற்றிருந்த 51 பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வேலைக்கு அமர்த்தியமை, சம்பளம் வழங்காமை, துன்புறுத்தல் மற்றும் நோய் வாய்ப்பட்டமை உள்ளிட்ட காரணங்களினால் குவைத் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் 193 பணிப்பெண்கள் தஞ்சம் பெற்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை சிறப்பு விமானமொன்றின் மூலம் 51 பெரும் இலங்கை அழைத்து வரப்பட்டனர். ஏனையோரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று எதிர்கொண்ட நெருக்கடி நிலை காரணமாக தூதுவராலயங்களில் தஞ்சம் கோரியிருந்த 7723 பேர் கடந்த இரு வருடங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குவைத்தில் நிர்க்கதியான இலங்கை பெண்களில் 51 பேர் நாடு திரும்பினர்

பட மூலாதாரம், YASSER AL-ZAYYAT

2015ம் ஆண்டு 2374 பேரும் 2016ல் 4189 பேரும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2016ல் அழைத்து வரப்பட்ட 4189 பேரில் கத்தாரிலிருந்து மட்டும் 2190 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனைத் தவிர சவுதி அரேபியாவிலிருந்து 734 பேரும் குவைத்திலிருந்து 1669 பெரும் அழைத்து வரப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :