“புலிகளுக்கு ஆதரவு என தமிழரின் கட்டடத்தை மகிந்த ராஜபக்ஷ பறித்தது செல்லாது”
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தை பறிமுதல் செய்ய, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்து செய்துள்ளது.

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI
இதன்படி பயங்கரவாத புலனாய்வு பிரிவு இந்த கட்டடத்தை எட்டு வாரங்களுக்குள் அதன் உரிமையாளரிடம் கையளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டடத்தை பறிமுதல் செய்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் தீர்மானத்தை எதிர்த்து, அதன் உரிமையாளர்களான ஸ்விட்சர்லாந்தில் வசித்து வரும் சண்முகம் சிவராஜா மற்றும் சிவராஜா சரோஜினி தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
தங்களுக்கு சொந்தமான இந்த கட்டடத்தை விடுதலை புலிகளுக்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி வாங்கியதாகவும் அங்கு விடுதலை புலிகளுக்கு உதவும் மருத்துவமனையை நடத்தியதாக குற்றஞ்சாட்டி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்ததாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி, அப்போது பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவுப்படி இந்த கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் அவசாரகால சட்டத்தின் கீழ் இந்த கட்டிடத்தை பறிமுதல் செய்யும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.
எனவே, அதனை பறிமுதல் செய்வதற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவு சட்ட ரீதியாக செல்லுப்படியாகாது என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கையால் மனுதாரர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே, அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்
- 'கணவனின் பாலியல் விருப்பத்தை நிராகரிப்பது குற்றம்': மலேசிய எம்.பியின் கருத்தால் சர்ச்சை
- 3 ஆண்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்: குவியும் பாராட்டு
- 'தரமணி' படத்திற்கு ஏ சான்றிதழ் கேட்டது ஏன்? இயக்குநர் ராம் விளக்கம்
- சீனாவில் "பெண் இயேசு வழிபாட்டு முறை" உறுப்பினர்கள் கைது
- கலை படைப்புகள், சிலிக்கான் சிலைகள் 'அசர' வைக்கும் கலாமின் மணிமண்டபம்
- 91 வயது அழகியின் அசாதாரண வாழ்க்கை கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- பிபிசி தமிழ் ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- பிபிசி தமிழ் டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பிபிசி தமிழ் : பிபிசி தமிழ் யு டியூப்