தந்தங்களுடன் மரத்தில் சிக்கிய யானை: கிளைகளை வெட்டி மீட்பு

  • 4 ஆகஸ்ட் 2017
சிக்கிய யானை

இலங்கையில் உடவளவ தேசிய வன பூங்காவில் பெரிய மரமொன்றின் கிளைகளுக்கிடையில் இரு தந்தங்களும் தும்பிக்கையும் சிக்கிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த காட்டு யானையொன்றை மரக் கிளைகளை வெட்டி அகற்றி காப்பாற்றியுள்ளனர்.

மரக் கிளைகளுக்கிடையில் தும்பிக்கையும் இரு தந்தங்களும் அகப்பட்டு அதனை வெளியே எடுக்க முடியாமல் நிலத்தில் விழுந்து கவலைக்கிடமான நிலையில் காணப்பட்ட இந்த யானையை காப்பாற்றும் பணியில் 30க்கும் மேற்பட்ட வன உயிரின இலாகா அதிகாரிகளும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

உடவளவ தேசிய வன பூங்காவில் நடமாடும் இந்த யானை 45 வயது மதிக்கத்தக்கது என வன உயிரின இலாகா கூறியுள்ளது.

பூங்காவில் கிழக்கு பக்கத்திலுள்ள மரமொன்றில் சிக்குண்ட யானைக்கு மயக்க மருந்து ஊசி ஏற்றப்பட்டு சலேன் வழங்கப்பட்ட பின்னர், மரக் கிளைகளை அறுத்து அகற்றி யானையை காப்பாற்றியதாக வன உயிரின இலாகா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன பூங்காவிலிருந்து 12 யானைகள் தங்கள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாக கிராம மக்களால் இனம் காணப்பட்டுள்ளது.

அதில் இந்த யானையும் ஒன்று என கிராம மக்களால் தெரிவிப்பதாக வன உயிரின இலாகா தென் பிராந்திய உதவி இயக்குநர் பிரசாந்த விமலதாஸ கூறுகின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்