இலங்கை: காயமுற்ற யானையை காப்பாற்றிய வன உயிரின இலாகா அதிகாரிகள்

අලි පැටවා

இலங்கையில் அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள காடு ஒன்றில் வாயிலும் தலையிலும் துப்பாக்கிச்சூட்டு காயமுற்ற காட்டு யானையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் வன உயிரின இலாகா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்ட இந்த யானை, சில நாட்களாக துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதியில் துன்பப்பட்டு வருவதை துறைமுக பணியாளர்கள் பார்த்துள்ளனர்.

வன உயிரின இலாகா அதிகாரிகளுக்கு இந்த செய்தி அறிவிக்கப்பட்டதும், விலங்கு மருத்துவ நிபுணர் உள்பட வன உயிரின இலாகாவினர் இந்த யானை இருந்த இடத்திற்கு விரைந்து வந்து இதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

இந்த யானை எழுந்து நடமாடக்கூட முடியாத அளவுக்கு சக்தி இழந்து காணப்படுவதால், இன்று செவ்வாய்க்கிழமை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன..

காயமுற்ற யானைக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அம்பாந்தோட்டாவில் காயமுற்றுள்ள யானைக்குட்டி ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

3 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் வாயிலும் தலையிலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, அதற்கு உகந்த சிகிச்சைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வன விலங்கு மருத்துவ அதிகாரி டாக்டர் மாலக்க அபேயவர்த்ன தெரிவித்திருக்;கிறார்.

வாயில் ஏற்பட்டுள்ள து்பபாக்கிச்சூட்டு காயம் காரணமாக யானை உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்த யானை ஏற்கனவே தும்பிக்கையில் அடிப்பட்டு காயம் பெற்றிருப்பதை அறிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

வேறொரு காட்டுப் பகுதியில் காயமுற்ற பின்னர், இந்த யானை இவ்விடத்திற்கு வந்திருக்கலாம் என இந்த பகுதிக்கு பொறுப்பான வன பாதுகாப்பு அதிகாரியான ஜே.ஏ.பி. விஜயகுமார தெரிவித்திருக்கிறார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் சுமார் 40 காட்டு யானைகள் நடமாடி வருவதாக கூறப்படுகின்றது.

கடந்த வருடம் மே மாதம் 6 மாத யானைக் குட்டியொன்று காட்டை விட்டு வெளியேறி வீதியை கடக்க முற்பட்ட வேளையில், துறைமுகத்தை அண்மித்த கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டது. அதனை காப்பாற்றிய பின்னர் இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்