முதல் முறையாக இலங்கையில் குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி

இலங்கையில் முதல் முறையாக குப்பைகளைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி. (கோப்புப் படம்)

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள வத்தள, கெரவலபிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கபடவுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று, வியாழக்கிழமை மாலை, அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதன்படி சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தென் கொரிய நிறுவனமொன்றுடன் இணைந்து அமைக்கப்படும் இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்காக 27 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இதன் முலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளொன்றுக்கு 700 மெட்ரிக் டன் குப்பை பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மைத்ரிபால சிறிசேன

அடிக்கல் நாட்டிய பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த திட்டத்தின் முலம் கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமென்று கூறினார்.

அதேபோன்று சூழல் மாசடைவு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென்றும் சிறிசேன தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்